கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட பைக் மெக்கானிக் கைது..!

0 3565
கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட பைக் மெக்கானிக் கைது..!

சென்னை அடுத்த தாம்பரம் அருகே கடன் தொல்லையால் செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்த பைக் மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.

பெருங்களத்தூரில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையில் சென்ற பெண்ணிடம் செயினை பறிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதும், வண்டலூர் மேம்பாலம் வழியாக அந்த நபர் தப்ப முயன்றார். அப்போது போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

பைக் மெக்கானிக்கான மணிகண்டன், தான் வாங்கிய கடனை அடைக்க அவ்வப்போது செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments