நெல்லையில் சக்திவாய்ந்த எல்.இ.டி விளக்குகளால் கோவில் கொடை விழா சென்றவர்களுக்கு கண் எரிச்சல்..!

0 6414
நெல்லையில் சக்திவாய்ந்த எல்.இ.டி விளக்குகளால் கோவில் கொடை விழா சென்றவர்களுக்கு கண் எரிச்சல்..!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே கோவில் கொடை விழாவில் பொருத்தப்பட்ட பிராகசமான LED விளக்குகளால் கண் எரிச்சல் ஏற்பட்டு 200 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

எடுப்பல் கிராமத்தில் உள்ள சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா பந்தலில் பொருத்தப்பட்டிருந்த சக்தி வாய்ந்த LED Focus லைட்டுகளால், அங்கிருந்தவர்களுக்கு மறுநாள் காலை கண் எரிச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

நெல்லை அரசு மருத்துவமனையிலிருந்து எடுப்பல் கிராமம் சென்ற கண் மருத்துவர் குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்துவிட்டு கண்களில் இடக்கூடிய சொட்டு மருந்துகளை அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments