ஆசிரியர்களை கிண்டல் செய்வதோடு ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக 12ம் வகுப்பு மாணவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர் போலீசில் புகார்..!

0 4073
ஆசிரியர்களை கிண்டல் செய்வதோடு ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக 12ம் வகுப்பு மாணவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர் போலீசில் புகார்..!

சென்னை திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேர் ஆசிரியர்களை கேலி, கிண்டல் செய்வதோடு ஒழுக்கமற்ற முறையில் நடந்துக் கொள்வதாக பள்ளி தலைமை ஆசிரியர் போலீசில் புகாரளித்துள்ளார்.

12ம் வகுப்பு பயிலும் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் போது இடையூறு செய்வதாகவும் பள்ளி, மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியைகள் கழிவறைக்கு செல்லும் போது கழிவறையை வெளிப்புறமாக பூட்டிவிட்டு செல்வதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

அதோடு சக மாணவிகள், ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் பேசுவது, மிரட்டுவது என ஒழுக்கமற்ற முறையில் நடந்துக் கொள்வதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குழந்தைகள் நல அலுவலர் முன்னிலையில் மாணவர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments