ஆட்டோ மொபைல்ஸ் விற்பனை நிலைய கிடங்கில் பயங்கர தீ விபத்து.. மூன்று கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல்..!

0 2344
ஆட்டோ மொபைல்ஸ் விற்பனை நிலைய கிடங்கில் பயங்கர தீ விபத்து.. மூன்று கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல்..!

ஆந்திராவின் அனந்தபூரில் ஆட்டோ மொபைல்ஸ் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

ஸ்ரீகாந்தம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆட்டோ மொபைல்ஸ் விற்பனை நிலைய கிடங்கின் முதல் தளத்தில் காலை 9 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர், நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள் உள்பட சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments