94 வருட வரலாற்றில் முதல்முறையாக மேக்அப் இல்லாமல் 'மிஸ் இங்கிலாந்து' இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அழகி..!

0 11769
94 வருட வரலாற்றில் முதல்முறையாக மேக்அப் இல்லாமல் 'மிஸ் இங்கிலாந்து' இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அழகி..!

மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94 வருட வரலாற்றில் முதல்முறையாக அழகி ஒருவர் மேக்அப் இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

லண்டனை சேர்ந்த கல்லூரி மாணவியான 20 வயதுடைய மெலிசா ராவ்ஃப், 'மிஸ் இங்கிலாந்து 2022' அழகிப் போட்டியில் பங்கேற்று ஒப்பனை இல்லாமலேயே இறுதிச்சுற்று வரை முன்னேறினார்.

தனது இயற்கையான உள்ளார்ந்த அழகை வெளிப்படுத்தவும், சமூக வலைதளங்களில் அழகு குறித்து சொல்லப்படும் நிர்ணயங்களை மாற்றவும் மேக்அப் இல்லாமல் போட்டியில் பங்கேற்றதாக மெலிசா ராவ்ஃப் கூறியுள்ளார்.

அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் 40 பெண்களுடன் மெலிசா ராவ்ஃப் போட்டியிடுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments