இயக்குனர் பாரதிராஜாவின் உடல் நிலை குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

0 2556
இயக்குனர் பாரதிராஜாவின் உடல் நிலை குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் பாரதிராஜாவின் உடல் நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவிற்கு ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவரது மனைவியிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments