சக்கரம் கழன்றதால் டிராக்டர் ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 14 பேர் உயிருடன் மீட்பு - ஒருவர் சடலமாக மீட்பு..!

0 2406
சக்கரம் கழன்றதால் டிராக்டர் ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 14 பேர் உயிருடன் மீட்பு - ஒருவர் சடலமாக மீட்பு..!

உத்திர பிரதேச மாநிலம் ஹார்தோய் மாவட்டத்தில், இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெக்ராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று தாங்கள் விளைவித்த பொருட்களை மண்டியில் விற்றுவிட்டு டிராக்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கர்ரா ஆற்று பாலத்தில் செல்லும் போது டிராக்டரின் சக்கரம் ஒன்று கழன்றதால், டிராக்டர் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments