யு.கே.ஜி பயிலும் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கைது..!

0 4534
யு.கே.ஜி பயிலும் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கைது..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வரும் 4 வயது பெண் குழந்தையை, பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பள்ளி தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டார்.

தனியார் பள்ளி தாளாளர் பிரபாவதியின் கணவர் காமராஜர், அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில், அவ்வப்போது மனைவி நடத்தி வரும் பள்ளிக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், பள்ளியிலிருந்து வீடு திரும்பிய குழந்தை அழுவதை கண்ட பெற்றோர் மாணவியின் உடம்பை பரிசோதனை செய்தபோது குழந்தையின் உடலில் ரணங்கள் மற்றும் உதிரப்போக்கு கண்டு அதிர்ச்சிடைந்து மாணவியை சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இதுகுறித்து சைல்ட் லைன் அமைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்திய போது, பள்ளியில் இருந்த குழு புகைப்படத்தில் தாளாளரின் கணவர் படத்தை காட்டிய குழந்தை, அவர் தனக்கு சாக்லேட் கொடுத்து, புத்தகங்கள் வைக்கும் அறைக்கு அழைத்து சென்றதாக கூறியது.

அதன் அடிப்படையில் வழக்கு பதியப்பட்ட நிலையில், திருச்செந்தூரில் இருந்து திரும்பி வரும் வழியில் எட்டயபுரத்தில் வைத்து காமராஜை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments