திருப்பூர் பனியன்.. அடுக்குமொழியில்அலப்பறை.. ஆண்ட்ரியாவை அலறவைத்த ஆங்கர்..!

0 4268
திருப்பூர் பனியன்.. அடுக்குமொழியில்அலப்பறை.. ஆண்ட்ரியாவை அலறவைத்த ஆங்கர்..!

திருச்சியில் நகைக்கடை திறப்பு விழாவில் அடுக்கு மொழியில் பேசுவதாக  நினைத்து  அலப்பறை செய்த வர்ணனையாளரை கண்டு, நடிகை ஆண்டிரியா மிரண்டு போனார். மேடையில்  ஆடி பாடச்சொன்னவரிடம் சிரித்தபடியே கையெடுத்து கும்பிட்டு மறுத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

திருச்சியில் நடந்த நகைக்கடை திறப்புவிழாவிற்கு மேளதஆளங்கள் முழங்க நடிகை ஆண்டிரியா அழைத்து செல்லப்பட்டார். 

கடையை திறந்து வைத்து மேல் தளத்துக்கு சென்று நகைகளை பார்வையிட்ட ஆண்டிரியா, அங்குள்ள கதவில் ஒட்டப்பட்டிருந்த கீர்த்தி சுரேஷின் வால்பேப்பர் இரண்டாக பிரிந்ததும் லிப்ட்டுக்குள் இருந்து கடைக்குள் வந்திறங்கினார்.

பின்னர் அவர் வெளியே கொழுத்தும் வெயிலில் காத்திருந்த ரசிகர்களை காண்பதற்காக மேடை ஏறினார், கையில் மைக்குடன் காத்திருந்த நிகழ்ச்சி வர்ணனையாளர் ஒருவர் ஆண்டிரியாவை இம்பிரஸ் செய்வதற்காக அடுக்கு மொழி வித்தையை அவிழ்த்து விட்டார்.. திருப்பூர்ன்னா பனியன்... காரைகால்ன்னா சனியன்... சென்ட்ரல்ன்னா ரெயிலு... வேலூர்ன்னா ஜெயிலுன்னு ... என்று தாடியில்லா டி.ஆர் போல கொந்தளித்த கையோடு, இப்போது ஆண்ட்ரியா ஆடி பாடுவார் என்று கூறுவதற்கு எத்தனிக்க சிரித்தபடியே முடியாது என்று மறுத்தார் நடிகை ஆண்ட்ரியா

தொடர்ந்து கடையை விட்டு வெளியே சென்றதும் அவருடன் ரசிகர்கள் போட்டிபோன்று செல்பி எடுத்துக் கொண்டனர். இதன்காரணமாக அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முன்னதாக நடிகை ஆண்ட்ரியாவை கடையை திறந்து வைக்க மட்டுமே பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்ததாகவும், ஆடிப்பாட வேண்டுமானால் கூடுதல் கட்டணம் வேண்டும் என்பதால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments