பா.ரஞ்சித்தின் புதிய படத்திற்கு A சான்றிதழ்..! சிறுவர்களுக்கு அனுமதி இல்லை

0 10361
பா.ரஞ்சித்தின் புதிய படத்திற்கு A சான்றிதழ்..! சிறுவர்களுக்கு அனுமதி இல்லை

தமிழ் சினிமாவில் தனக்கென புது பாணியில் படமெடுத்து பிரபலமான அட்டகத்தி இயக்குனர் பா.ரஞ்சித்தின் புதிய படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

சாதி அரசியலை மையப்படுத்தி படம் மெடுத்து தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் அட்டக்கத்தி இயக்குனர் பா.ரஞ்சித்..! மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் அவரை கவனிக்கதக்க இயக்குனராக்கிய நிலையில் தனது நீலம் புரெடக் ஷன்ஸ் மூலம் படங்களை தயாரித்தும் வருகின்றார்.

அந்தவகையில் பா. ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது என்ற பெயரில் புதிய படத்தை எடுத்துள்ளார். ஆண்கள் ஏன் ஆண்களை காதலிக்க கூடாது ? காட்டுப்பூனைக்காரன், நாட்டுப்பூனைக்காரியை ஏன் காதலிக்க கூடாது ? என்று விசித்தரமான கேள்வியுடன் புதிய படத்தின் டயலாக்கை வைத்து முன்னோட்டம் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்

படத்தில் பல்வேறு சமூக , அரசியல் கருத்துக்களை தனது பாணியில் பா.ரஞ்சித் தெரிவித்திருந்த நிலையில் தணிக்கை குழு இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும் குழந்தைகளோ , சிறுவர் சிறுமிகளோ திரையரங்கிற்கு சென்று இந்த படத்தை பார்க்க அனுமதிக்க ஏற்ற படமல்ல என்று இந்த சான்று வழங்கப்பட்டு உள்ளது.

பா.ரஞ்சித்தின், வயது வந்தோருக்கான இந்த புதிய படம் வருகின்ற 31 ந்தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments