சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ராட்சத கிரகத்தின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு கண்டுபிடிப்பு..!

0 5651

சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள ராட்சத கிரகத்தில் கார்பன்-டை-ஆக்சைடு ((CO2)) இருப்பதற்கான தெளிவான ஆதாரத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி கண்டறிந்துள்ளது.

700 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் WASP-39 எனப் பெயரிடப்பட்ட ராட்சத வெப்ப வாயு கிரகத்தின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வியாழன் கிரகத்தை விட நிறையில் 1.3 மடங்கு பெரிதான இந்த வாயு கிரகத்தில், கார்பன்- டை-ஆக்சைடு இருப்பதால் அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments