20ஓவர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை

0 7590

20ஓவர் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது.  ரோகித் சர்மா தலைமையில் களம் காணும் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் நாளை மோதுகிறது.

துபாய் சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி நாளை இரவு 7.30 மணி அளவில் நடைபெறுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments