பாசி நிதி நிறுவனம் மூலம் 930 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு ; இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், 171 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு

0 2606
பாசி நிதி நிறுவனம் மூலம் 930 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு ; இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், 171 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு

பாசி நிதி நிறுவனம் மூலம் 930 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், 171 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கிய அந்நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து நிறுவனத்தின் இயக்குநர் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன் மற்றும் பங்குதாரர் கமலவள்ளியை சி.பி.ஐ கைது செய்தது.

9 ஆண்டுகளுக்கு மேல் விசாரணை நடந்த நிலையில், மோகன்ராஜ், கமலவள்ளிக்கு சிறை தண்டனையுடன் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கு தொடர்ந்த ஆயிரத்து 402 பேருக்கு அபராதத் தொகையை அளிக்கவும், பாதிக்கப்பட்ட 52 ஆயிரம் பேருக்கு பணம் திரும்பி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments