அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மூடுவிழா - இ.பி.எஸ்.

0 2453

.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு மூடுவிழா நடத்துவதாக குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, நாளை திண்டிவனத்தில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இது குறித்த அறிக்கையில், விழுப்புரம் மரக்காணம் அருகே 60 எம்.எல்.டி. கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்து 692 கிராம குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க ஆயிரத்து 502 கோடி ரூபாய் மதிப்பில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்திற்கு பின், திட்டம் கைவிட்டதால் மக்களின் குடிநீர் வாய்ப்பு பறிக்கப்பட்டதாக இ.பி.எஸ். குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments