இலவசங்கள் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

0 2915
இலவசங்கள் தொடர்பான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.

இலவசங்கள் தொடர்பான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார். 

தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு எதிராக பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த வேண்டும் என்று கோரி இருந்தனர்.

தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், 70 ஆண்டு கால உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக அவரது அமர்வில் முதல் வழக்காக, இலவசங்கள் தொடர்பான வழக்கின் விசாரணை நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர், இவ்வழக்கின் சிக்கலான தன்மையை கருத்தில் கொண்டு வழக்கை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டார்.

தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் அனைத்தையும் இலவசங்களாக கருத முடியாது என்றும், அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அறிவிப்பதை எதிர்க்கும் பிரச்சினையை ஆராய ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கலாம் என்றும் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்தார்.

இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டலாம் என்று ஏற்கனவே தாங்கள் தெரிவித்து இருந்ததையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து இலவசங்கள் தொடர்பான வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments