4 இடங்கள் பரிசீலித்து குறைவான குடியிருப்புகள் இருந்ததால் பரந்தூர் தேர்வு - அமைச்சர் எ.வ.வேலு

0 2383
பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் ஆயிரத்து 5 வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தை மதிப்பை விட மூன்றரை மடங்கு அதிகம் இழப்பீடு தரப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் ஆயிரத்து 5 வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தை மதிப்பை விட மூன்றரை மடங்கு அதிகம் இழப்பீடு தரப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையத்தின் அவசியம் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ அன்பரசன் உள்ளிட்டோர் பேட்டியளித்தனர்.

நிலம் வழங்குவோரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், வீடுகட்ட, நிலம் வழங்க பணம் வழங்கப்படும் என்றும் எ.வ.வேலு தெரிவித்தார்.

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது சேலம் 8 வழிச்சாலைத்திட்டத்தில் சாலை போடக்கூடாது என சொன்னது இல்லை என்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை அழைத்து பேசுங்கள் என்றுதான் சொன்னதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments