தனியார் நிதி நிறுவன உரிமையாளர் கடத்திக் கொலை செய்யப்பட்ட விவகாரம் ; நிதி நிறுவனத்தில் பணியாற்றியவர்களே கொலை செய்தது அம்பலம்

0 3928
தனியார் நிதி நிறுவன உரிமையாளர் கடத்திக் கொலை செய்யப்பட்ட விவகாரம் ; நிதி நிறுவனத்தில் பணியாற்றியவர்களே கொலை செய்தது அம்பலம்

நாமக்கல் அருகே நிதி நிறுவனத்தில் கையாடல் செய்த பணத்தை திருப்பிக் கேட்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தில், தனியார் நிதி நிறுவன உரிமையாளரை கடத்திக் கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த கெளதம் என்பவரை கடந்த 22ம் தேதி இரவு மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்ற நிலையில், அவர் 24ம் தேதி சேலம் சங்ககரி அருகே ஏரிக்கரையில் உடலில் கத்திக் குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

சந்தேகத்தின் பேரில் கெளதமின் நிதி நிறுவன மேலாளர் குணசேகரனை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது குணசேகரன் தன்னுடன் பணிபுரியும் உறவினரான பிரகாஷுடன் சேர்ந்து பணத்தை கையாடல் செய்ததும் பணத்தை திருப்பிக் கேட்டு கெளதம் நெருக்கடி கொடுத்ததால் முன்விரோதம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதனால், இவர்கள் இருவரும், ஏற்கனவே ஒரு லட்சத்து 60 ஆயிரம் பணம் பெற்றது தொடர்பாக கெளதமுடன் முன்விரோதத்தில் இருந்த முன்னாள் ஊழியரான தீபன் உடன் சேர்ந்து திட்டமிட்டு கெளதமை கடத்திக் கொலை செய்ததும் அம்பலமானது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments