முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏவை காரில் கடத்திச் சென்று ஒன்றரை கோடி ரூபாய் பணம் பறிப்பு!

0 3706

சத்தியமங்கலம் அருகே அ.தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரனை, ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று ஒன்றரை கோடி ரூபாய் பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன், புஞ்சை புளியம்பட்டி போலீசில் அளித்த புகாரில், புஜங்கனூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த தன்னை, மேட்டுப்பாளையம் அருகே காரில் வழிமறித்த கும்பல் கண்களை மறைத்து காரில் கடத்திச் சென்று பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியதாகவும், தன்னை விடுவிக்க முன்னாள் அதிமுக நிர்வாகி மிலிட்டரி சரணவன் இதற்கு 3 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும், ஒன்றைரை கோடி ரூபாய் கொடுத்தவுடன் தன்னை விட்டுச் சென்றதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பலத்த காயமடைந்த ஈஸ்வரன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments