காவல் நிலையத்தில் காதலிக்கு பளார் விட்ட மப்ஃடி போலீஸ் எஸ்.ஐ..! ஆட்டோக்காரருக்கும் அடி!

0 5579

காஞ்சிபுரம் நகர காவல் நிலையத்துக்கு தன்னை தேடி வந்த டிக்டாக் காதலியை, சாதாரண உடையில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் ,கன்னத்தில் அறைந்து, செல்போனை பறித்து விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது. காதலியை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனரும் தாக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றியவர் சோமு என்கின்ற சோமசுந்தரம். இவர் தித்திக் டாக் என்ற செல்போன் செயலியில் ஆட்டம் போட்டு வீடியோ பதிவிட்டதால் பிரபலமான டிக்டாக் பிரியாவை வாடகை காதலியாக்கி, அவருடன் திருமணம் கடந்த உறவு வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பதவி உயர்வு கிடைத்த பின்னர் தன்னை ஒரு ஸ்டிரிக்ட்டான சினிமா போலீஸ் போல காட்டிக் கொண்ட சோமசுந்தரத்திற்கும், வாடகை காதலி பிரியாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. பிரியாவின் தம்பியை வழக்கு ஒன்றில் பிடித்து கொடுத்ததாகவும், கூறப்படுகிறது.

இதனால் தனக்கும் எஸ்.எஸ்.ஐ சோமுவுக்குமான காதலை அவரது மனைவியிடம் போட்டுக் கொடுத்ததோடு, சோமுவின் மாமனாரிடமும் புகாராக தெரிவித்துள்ளார் ப்ரியா. இதனால் சோமசுந்தரம் ஆத்திரத்தில் இருந்த நிலையில் சம்பவத்தன்று காவல் நிலையத்திற்கு சென்ற அந்தப்பெண் செல்போனில் வீடியோ எடுத்த படியே அவரிடம் பேச்சுக் கொடுத்தார்.

அடுத்த நொடி ஆவேசமான சோமசுந்தரம் அந்த பெண்ணை பளார் பளார் என்று அடித்து செல்போனை பறித்துக் கொண்டு விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. செல்போன் பறிக்கப்பட்டதால் ஆடைகளை கழற்றி போராட்டம் செய்யப்போவதாக அந்தப்பெண் திடீர் புரட்சி செய்ததால், பயந்து போய் செல்போன் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து வெளியே சென்ற பெண்ணை விரட்டிச்சென்ற எஸ்.எஸ்.ஐ சோம சுந்தரம், அந்த பெண்ணை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனரை பிடித்து தாக்கினார். இதற்கிடையே அந்த ஆட்டோவுக்குள் இருந்து வந்த மற்றொரு பெண், கேட்ட நேரத்தில் எல்லாம் பெண்களை அனுப்பி வைத்ததாக கூறி மல்லுக்கு நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

இவர்களுக்கு இடையே என்ன பிரச்சனை? என்ன மாதிரியான தொடர்பு ? என்பதை விசாரித்து உயர் காவல் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஏற்கனவே சோமசுந்தரத்தின் தில்லு முல்லு சேட்டைகள் காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதால் அவரை உத்திரமேரூர் அடுத்த பெருநகர் காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்துள்ளனர்.

சில உயர் அதிகாரிகளுடன் நெருக்கத்தில் இருந்து கொண்டு சோமசுந்தரம், காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுவதாக காவலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனிடையே, காஞ்சிபுரம் நகர காவல் நிலைய வளாகத்தில் பெண் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியான நிலையில், பெருநகர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சோமசுந்தரத்தை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வீடியோ தொடர்பாக விசாரணை மேற்கொண்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments