சரக்கு வச்சிருக்கேன்…. இறக்கி வச்சிருக்கேன்.. சந்துக்கடையில் சிந்து பாடும் மீனா..! டாஸ்மாக்கிற்கே சவால் விடும் விற்பனை..!

0 15191

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்  பெங்களூர் - சேலம் பழைய பைபாஸ் சாலையோரம் டீ கடை போல் அமைக்கப்பட்ட சந்துக்கடையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதியுடன் பெண் ஒருவர் வரிசையாக மதுப்பாட்டில்களை அடுக்கி வைத்து மது விற்கும்  காட்சிகள் வெளியாகி உள்ளன

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி நான்கு ரோடு. பெங்களூர் - சேலம் பழைய பைபாஸ் சாலையில் உள்ள கிரசர் அருகே அமைந்துள்ளது இந்த 50 வயது மீனா பொண்ணிண் டக்கர் சரக்கு சந்துக்கடை..!

தேசிய நெடுஞ்சாலை என்பதால் அரசு டாஸ்மாக் கடை இந்த பகுதியில் மூடப்பட்டதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு மது விற்பனையை அந்த பெண் செய்து வருவதாகவும், டாஸ்மாக் போல சில குறிப்பிட்ட கம்பெனியின் மது வகைகள் மட்டுமில்லாமல் எண்ணற்ற பிராண்டு மது வகைகளையும் பெங்களூரில் இருந்து கடத்தி வந்து பகிரங்கமாக விற்று வருவதாக சீனியர் குடிமகன் ஒருவர் தெரிவித்தார்

எப்போதும் வாடிக்கையாளர்கள் வருவதும்... அவர்களுக்கு சரக்கு ஊற்றி கொடுப்பதும் என்று...டாஸ்மாக்கிற்கு இணையாக மதுவகைகளை விற்பனை செய்து வரும் மீனாவிடம் பணமில்லை என்று எவரும் கடன் சொல்ல இயலாது. Google pay, phone pay,Paytm ஸ்கேனர் மூலம் பணத்தை செலுத்திய பின்னரே கைக்கு சரக்கு வரும்

இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை டாஸ்மாக்கில் கூட கிடையாது. அந்த அளவிற்கு மீனாபொண்ணு அட்வான்ஸ் டென்னாலஜியுடன் மதுக்கடை நடத்தி வருகிறார்.

மாவட்ட மது விலக்கு அமலாக்கத்துறை போலீசாரை வாரந்தோறும் மீனா கவனித்து விடுவதால் இந்த திருட்டு டாஸ்மாக் கடையை எவரும் கண்டு கொள்வதில்லை என்று அங்கு சென்று வரும் மதுப்பிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சட்டவிரோத மதுக்கடையால் அந்தப்பகுதியில் செல்லும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை ஓரங்கட்டி போதை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments