ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு ஹெலிகாப்டர் வாங்கிய தொழிலதிபர்

0 3539

தொழிலதிபரும், லுலு குழுமத்தின் தலைவருமான எம்ஏ யூசுப் அலி 100 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன சொகுசு ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார்.

ஏர்பஸ் நிறுவனம் தயாரித்துள்ள எச்-145 ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் இரண்டு விமானிகள் உட்பட 7 பேர் பயணிக்க முடியும். இது கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடி உயரத்தில் பறந்து மணிக்கு 246 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். இந்த ஹெலிகாப்டரில் லுலு குழுமத்தின் லோகோவும், அவரது பெயரின் முதல் எழுத்தும் இடம் பெற்றுள்ளது.

ஆர்.பி. குழுமத்தின் தலைவர் ரவி பிள்ளை, கடந்த மார்ச் மாதம் ஏர் பஸ் எச்-145 ஐ வாங்கிய முதல் இந்தியர் ஆவார். இதை தொடர்ந்து ஹெலிகாப்டர் வாங்கிய 2-வது இந்தியர் எம்ஏ யூசுப் அலி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments