2030-ல் 6ஜி சேவை பிரதமர் மோடி உறுதி.!

0 2749

அக்டோபர் மாதத்தில் 5ஜி சேவை தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்னும் எட்டு ஆண்டுகளில் இந்தியாவுக்கு 6 ஜி சேவை சாத்தியமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் தொழில்நட்பம் மற்றும் மின்னணுத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் அனைவருக்கும் சாத்தியமாக எளிய கட்டணத்தில் தரமான 5 ஜி சேவை கிடைக்கும் என்று அறிவித்துள்ளார்.

5 ஜி சேவை தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் இச்சேவை சென்றடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூலமாக இச்சேவையை மக்களுக்கு வழங்க மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.தமது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி இந்தியா தொழில்நுட்பப் புரட்சியை நோக்கி நகர்வதாகக் கூறியிருந்தார்.

அடித்தட்டு மக்கள் வரை இந்த தொழில்நுட்பப் புரட்சி சென்றடையும் என்றும் மோடி உறுதியளித்திருந்தார்.
இதனிடையே இந்த தசாப்தம் முடிவதற்குள் 6 ஜி சேவை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

காணொலி வாயிலாக இந்தியா ஹாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடிய பிரதமர் மோடி, இளைய தலைமுறைக்குப் பயன்படும் வகையில் தொழில் நுட்பத்தை வழங்குவதாகத் தெரிவித்தார். தொழில்நுட்பத்தோடு விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மோடி தெரிவித்தார்.

குறைந்த கட்டணத்தில் உலகத்தரமான 5 ஜி சேவை நாட்டு மக்களுக்கு அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் கிடைத்துவிடும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments