கத்தியால் குத்தப்பட்ட ஆர்.பி.எப் பெண் காவலர் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிய சிசிடிவி காட்சி.!

0 4763

சென்னையில்,கத்தியால் குத்தப்பட்ட ஆர்.பி.எப் பெண் காவலர் ஓடும் மின்சார ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

செவ்வாய் இரவு கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு சென்ற மின்சார ரயிலில் ஆசிர்வா என்ற 29 வயது ஆர்.பி.எப் பெண் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மகளிருக்கான பெட்டியில் ஏறிய 40 வயது மதிக்கத்தக்க போதை ஆசாமியிடம் இது மகளிருக்கான பெட்டி என ஆசிர்வா கூறியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த நபர் ஆசிர்வா-வை கத்தியால் கழுத்திலும், மார்பிலும் குத்தியதாக கூறப்படுகிறது.

அவனிடம் சண்டையிட்டுவிட்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஆசிர்வா ரத்த காயங்களுடன் நடைமேடை நோக்கி விரைந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனை அழைத்து சென்ற ஆர்.பி.எப் போலீசார், கத்தியால் குத்திய நபரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments