பாஜக தலைவரும், நடிகையுமான சோனாலி போகத் மரணத்தில் திடீர் திருப்பம்.!

0 5961

அரியானா பாஜக தலைவரும், நடிகையுமான சோனாலி போகத்தின் உடலில் ஏராளமான காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வில் தெரியவந்ததை அடுத்து 2 பேர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 22ம் தேதி கோவாவில் தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது, உடல்நலக்குறைவு ஏற்பட்ட சோனாலி மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஆனால், அவரது மரணத்தில் இருப்பதால் விசாரணை நடத்த வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், கத்தியை பயன்படுத்தாமல் பிற பொருட்களை கொண்டு தாக்கப்பட்ட காயங்கள் சோனாலி உடலில் இருப்பதாக உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது இரண்டு கூட்டாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கோவா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments