பட்டா பெயர் மாறுதலுக்கு விவசாயியிடம் 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.!

0 3730

கடலூர் அருகே பட்டா பெயர் மாறுதலுக்கு விவசாயியிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

அன்பழகன் என்னும் விவசாயி தனது தந்தை பெயரில் இருக்கும் பட்டாவை தனது பெயருக்கு மாற்ற ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.

இது தொடர்பாக கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியை அணுகிய போது, அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

அன்பழகன் அளித்த புகாரின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலர் பணத்தை பெறும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதே போல திருத்தணியில் இறப்புச் சான்று தர 2 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments