பேருந்து படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை கண்டித்த ஓட்டுநரைத் தாக்கிய பள்ளி மாணவர்கள்.!

0 3904

காஞ்சிபுரத்தில், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்ததை கண்டித்ததால் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகக் கூறப்படும் மாணவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அரசுப்பேருந்தின் முன் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்கள் 4 பேரை ஓட்டுநர் ரமேஷ் மேலே எறி வரும் படி கூறியுள்ளார்.

அதற்கு அவர்கள் மறுத்ததால் பேருந்தை விட்டு கீழே இறங்குமாறு ரமேஷ் கூறியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அவரது கண்ணத்தில் அறைந்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு தப்பியோட முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

அவர்களில் ஒரு மாணவன் தன்னை பிடிக்க முயன்ற 40 வயது நபரை தலையில் தாக்கியதால் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது.

ஆவேசமடைந்த பொதுமக்கள் அம்மாணவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments