வரதட்சணை தராததால் ஆத்திரம்.. மாமியார் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருமகன் கைது..!

0 2968
வரதட்சணை தராததால் ஆத்திரம்.. மாமியார் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருமகன் கைது..!

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியில், வரதட்சணை கேட்டு மாமியார் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

2 ஆண் குழந்தைகளுக்குத் தந்தையான சரவணன், அடிக்கடி மது போதையில் மனைவியை அடித்து துன்புறுத்தியதாகவும், வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

வாடகை ஆட்டோவிற்கு முன்பணம் செலுத்த மாமியாரிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சரவணன், மாமியாரை கத்தியால் வெட்டிவிட்டு வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து தப்பியோடி தலைமறைவான சரவணனை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments