கார் வாங்குவது போல் நடித்து கடத்தல்.. தமிழக எல்லையில் மடக்கியது போலீஸ்...!

0 2794

புதுச்சேரியில் கார் வாங்குவது போல் நடித்து உரிமையாளரை ஏமாற்றி காரை ஓட்டிச்சென்ற கேரள இளைஞரை தமிழக எல்லையில் போலீசார் கைதுசெய்தனர்.

லாஸ்பேட்டையை சேர்ந்த டிராவல்ஸ் நடத்தி வரும் குமரன் என்பவர், தனது எட்டியோஸ் காரை விற்பனை செய்வதற்காக OLX -ல் விளம்பரம் செய்துள்ளார்.

இதனை பார்த்து குமரனை தொடர்புகொண்ட ஒருவர், காரை வாங்கிக்கொள்வதாகக்கூறி லாஸ்பேட்டைக்கு வந்துள்ளார். காரை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று கூறியதால் அந்த நபரிடம் சாவியை கொடுத்துவிட்டு அவருடன் காரில் அமர்ந்து குமரன் சென்றுள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலையில் தமிழக எல்லை அருகே சென்றுக்கொண்டிருந்த போது சாலையோரம் இருந்த மரத்தில் லேசாக மோதி காரை நிறுத்தியுள்ளார்.

இதனால் குமரன் கீழே இறங்கி காரில் ஏற்பட்ட சேதத்தை பார்க்கும்போது எதிர்பாராதவிதமாக காரை ஓட்டிக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

உடனடியாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் குமரன் புகார் அளித்ததையடுத்து அவர்கள் தமிழக எல்லை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மரக்காணத்தில் காரை தடுத்து நிறுத்திய தமிழக போலீசார் காரை ஓட்டிவந்தவரை கைது செய்து லாஸ்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேரள மாநிலம் குருவாயூரை சேர்ந்த 24 வயதான முகமது அஸ்லாம் என்பதும், இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்ததையடுத்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு காலாபட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments