விஜயகாந்துக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து..!

0 2714
விஜயகாந்துக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து..!

இன்று பிறந்தநாள் காணும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டுவிட்டரில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உடல் நலம் பெற்று துடிப்பான மனிதராக வலம் வர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும், நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments