வெள்ளளூர் பேருந்து நிலையத்தை மாற்ற நினைத்தால் தொடர் போராட்டம் நடத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி!

0 3330

கோவை வெள்ளளூர் பேருந்து நிலையத்தை மாற்ற நினைத்தால் தொடர் போராட்டம் நடத்தப்படுமென முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி "வெள்ளளூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில், பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்தால் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும்” எனக்கூறிய அவர், “ கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டம், மூன்றாவது கூட்டுகுடிநீர்த்திட்டம், ஆனைமலை நல்லாறு திட்டம், மெட்ரோரயில் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் அத்திக்கடவு அவினாசி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக” தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments