வீட்டில் தோஷம் கழிக்க பணம் கேட்டு மோசடி செய்த போலிச்சாமியார் கைது.!

0 3263

கடலூர் மாவட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட போலிச் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடலூரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரின் வீட்டிற்கு வந்த ஐந்து பேர் அவரது வீட்டில் தோஷம் உள்ளதெனவும்,தோஷத்தை நிவர்த்தி செய்ய 45 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும்” கூறியுள்ளனர்.

ஜோதிமணியிடம் 3 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு மீதி பணத்தை தயார் செய்யும்படி சொல்லி சென்றுள்ளனர். சந்தேகமடைந்த ஜோதிமணி அளித்த தகவலின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ராகவேந்திராசிட்டி செல்லும் வழியில் தேநீர்க் கடையில் நின்றிருந்த போலி சாமியார் ஜெகதீஷ் உள்ளிட்ட 5 பேரையும் கைதுசெய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments