3-ம் ஆண்டு மாணவரை அரிவாளால் வெட்டிய முதலாமாண்டு மாணவர்.!

0 7938

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் முன்விரோதம் காரணமாக மாணவிகள் முன்பு தன்னை தாக்கிய 3-ம் ஆண்டு மாணவரை அரிவாளால் வெட்டிய முதலாமாண்டு மாணவரை போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலம் குப்பலநத்தத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் அதே கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த 17 வயது மாணவர் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இரு தினங்களுக்கு முன்பு மாணவிகள் முன்பு முதலாமாண்டு மாணவரை ஜெகதீஸ்வரன் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் நேற்று அரிவாளுடன் வந்த முதலாமாண்டு மாணவர், கல்லூரி வளாகத்தில் நின்ற ஜெகதீஸ்வரன் காதில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அரிவாளால் வெட்டிய முதலாமாண்டு மாணவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments