மின்சாரம் முறையாக துண்டிக்கப்படாததை கவனிக்காமல் டிரான்ஸ்பார்மரில் ஏறி பணி செய்த மின்வாரிய ஊழியர் பலி.!

0 3461

காஞ்சிபுரம் அருகே டிரான்ஸ்பார்மரில் 2 பேஸ்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது பேஸில் மின்சாரம் முறையாக துண்டிக்கப்படாததை கவனிக்காமல் டிரான்ஸ்பார்மரில் ஏறி பணி செய்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தண்டலம் கிராமத்தில் அவ்வப்போது மின் தடை ஏற்படுவதாக கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில், திருப்புகழியைச் சேர்ந்த பக்கிரி சாமி என்ற மின்வாரிய ஊழியர் டிரான்ஸ்பார்மரில் ஏறி அதனை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து தீ பற்றியதில், டிரான்ஸ்பார்மரிலேயே பக்கிரி சாமி உடல் கருகி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments