அரசு பேருந்தின் பின்புற ஏணியில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்.. வைரலாகும் ஆபத்தான பேருந்து பயண வீடியோ..!

0 3357
அரசு பேருந்தின் பின்புற ஏணியில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்.. வைரலாகும் ஆபத்தான பேருந்து பயண வீடியோ..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பேருந்தின் பின்புறத்தில் ஏணியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நம்பியூர் வேமாண்டம்பாளையம் மற்றும் பட்டிமணியக்காரன்பாளையத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நேற்று மாலை வழக்கம் போல பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வீட்டிற்கு செல்ல அரசு பேருந்தில் ஏறினர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் வீட்டிற்கு செல்லும் அவசரத்தில் நடத்துனருக்கு தெரியாமல் பேருத்தின் பின்புறம் உள்ள ஏணியில் ஏறி தொங்கியபடி பயணம் செய்துள்ளனர்.

இதனை பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments