டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு..!

0 3237
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு..!

மதுபானக் கடை உரிமம் தொடர்பான குற்றச்சாட்டில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கலால் துறையை கவனித்து வருகிறார்.

மதுபானங்களை விற்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டதிலும், விற்பனை உரிமம் வழங்கப்பட்டதிலும் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ.அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு டெல்லியில் உள்ள மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட அனைத்து இடங்களில் சோதனை நடத்தினர்.

இதையடுத்து, அமலாக்கத்துறையினர் மணீஷ் சிசோடியா மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சோதனை மற்றும் வழக்குகளால் கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments