வால்பாறையில் கோவில், வீடுகளை இடித்து தள்ளி காட்டு யானைகள் அட்டகாசம் - மக்கள் பீதி..!
வால்பாறையில் கோவில், வீடுகளை இடித்து தள்ளி காட்டு யானைகள் அட்டகாசம் - மக்கள் பீதி..!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கோவில் மற்றும் வீடுகளை காட்டு யானை இடித்து தள்ளி சேதப்படுத்தியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நேற்று இரவு ஊசிமலை டாப் எஸ்டேட் குடியிருப்புக்குள் நுழைந்த 4 காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் ஜன்னல் கதவுகளை உடைத்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளது.
மேலும் அருகில் இருந்த கிருஷ்ணன் மற்றும் மாரிமுத்து ஆகியோரின் வீடுகளையும் இந்த காட்டு யானைகள் இடித்து தள்ளி சேதப்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து 4 காட்டு யானைகளையும் அங்கிருந்து விரட்டினர்.
Comments