இளம் பெண்ணுக்குள் பேய்.. குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்த அருள்வாக்கு சாமியார்..! போதையில் போனா பரலோகம் தான்..!

0 4844
இளம் பெண்ணுக்குள் பேய்.. குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்த அருள்வாக்கு சாமியார்..! போதையில் போனா பரலோகம் தான்..!

குடி போதையில் பல்சர் வாகனம் ஓட்டி விபத்தில் பலியான இளைஞர் தனது உடம்புக்குள் ஆவியாக புகுந்திருப்பதாக கூறிய இளம் பெண்ணுக்கு குவார்ட்டர் மதுவும் கோழி பிரியாணியும் கொடுத்து வடிவேலு பாணியில் பேயை விரட்டியதாக கூறப்படும் சம்பவம் திருப்பூரில் அரங்கேறி உள்ளது.

திருப்பூரை சேர்ந்த அருள்வாக்கு சுவாமி ஜீ என்ற சாமியார் , தனது ஆசிரமத்தில் பேயை விரட்டுவதாக கூறி பல்வேறு வித்தைகளை காட்டி வருகிறார்.

அந்த வகையில் பேய் பிடித்திருப்பதாக அவரிடம் அழைத்து வரப்பட்ட தஞ்சாவூரை சேர்ந்த பெண்ணுக்கு அவர் வடிவேலு பாணியில் பேயை விரட்டியதாக வீடியோ வைரலாகி வருகின்றது.

சினிமாவில் குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்தால் பேய் ஓடிபோயிருமுன்னு வடிவேலு காமெடிக்காக கிளப்பி விட்ட அதே டெக்னிக்கை இந்த சுவாமி ஜீயும் கையாண்டுள்ளார்.

அந்த சாமியார் முன்பு தலைவிரி கோலத்தில் நின்ற அந்த இளம் பெண் தன் பெயர் ரமேஷ் என்றும் டாஸ்மாக் பாரில் மது அருந்தி விட்டு பல்சர் வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி பலியானதாகவும், ஒரு நாள் மாலை 6 மணிக்கு இந்த பெண் தனியாக வரும் போது உடலுக்குள் புகுந்து விட்டேன் என்று சொல்ல, உனக்கு குவார்ட்டரும், கோழிபிரியாணியும் வாங்கி தருகிறேன் இந்த பெண்ணை விட்டு சென்று விட வேண்டும் என்று டீல் பேசுகிறார் சாமியார்.

டீல் ஓகே வான நிலையில் முன்கூட்டியே தயாராக வாங்கி வைத்திருந்த மதுவை அந்த பெண்ணுக்கு குடிக்க கொடுக்கிறார்.

தரையில் அமர வைத்து இலைபோட்டு லெக்பீஸுடன் பிரியாணியையும் பரிமாறும் சாமியார், பிரியாணி சரியில்லன்னா ரமேசு கடைக்காரனை பார்த்துக்குவான் என்று போற போக்கில் ஒரு பஞ்ச் அடிக்கிறார்.

சாப்பிட்டு முடித்து போதையுடன் தள்ளாடி நிற்கும் அந்தப் பெண்ணின் முகத்தில் மஞ்சள் தண்ணீரை அடிக்கவும் அந்த பெண் மயங்கி சரிய ஒருவர் தாங்கிப்பிடித்துக் கொண்டார். அதன் பின்னர் அந்தப்பெண் தனது உண்மையான பெயரையும் ஊரையும் சொல்லி சரியாகிவிட்டதாக கூறுவது போல அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

மறு படியும் இந்தப் பெண் மீது ஆவியாக புகுந்தால் கண்டதுண்டமாக வெட்டி தீக்குண்டத்தில் போட்டுவிடுவேன் என்று உருவமோ, வடிவமோ இல்லாத.. கண்ணுக்கும் தெரியாத... அந்த ஆவியை பார்த்து இந்த சாமியார் மிரட்டியது தான் இந்த வீடியோவின் ஹைலைட்..! ஒரு வேளை இவரு சிரிப்பு சாமியாரா இருப்பாரோ..?

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments