ஊதியம் கேட்டு மறியலில் ஈடுபட்ட இந்திய தொழிலாளர்களை நாடு கடத்திய கத்தார்..!

0 3446

கத்தாரில் ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய தொழிலாளர்களை நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கத்தாரில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவிக்கும் துயரங்கள் தொடர்பாக நெடுங்காலமாக குற்றச்சாட்டுகள் இருந்துவந்தன.

இந்நிலையில், அல் பண்டாரி என்ற கட்டுமான நிறுவனத்தில், 7 மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கப்படாததால் அங்கு பணியாற்றும் இந்தியா, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிறுவன வாசலில் மறியலில் ஈடுபட்டனர்.

3 மாதங்களில் அங்கு கால்பந்து உலகக்கோப்பை தொடங்க உள்ளதால், இதுபோன்ற புகார்களை தவிர்க்க, பொதுமக்கள் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிப்பதாக கூறி அந்நாட்டு அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments