அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 இடங்களில் துப்பாக்கிச்சூடு.. 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்!

0 2113

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் 2 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

மிட் டவுன் பகுதியில் உள்ள காலனி சதுக்கத்திற்கு அருகே கட்டிடம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.

அப்பகுதியில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் தொடர்பாக அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் சந்கேத்திற்குரிய ஒரு பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments