நடிகர் விக்ரமை காண குவிந்த ரசிகர்களை எட்டி உதைத்த பாதுகாப்பு படை வீரர்..!

0 3582

கோப்ரா திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவுக்காக திருச்சி விமான நிலையம் வந்த நடிகர் விக்ரமை காண குவிந்த ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி, திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெறுகிறது.

அதில் பங்கேற்க திருச்சி விமான நிலையம் வந்த நடிகர் விக்ரமுடன் செல்பி எடுக்க, ரசிகர்கள் ஒருவரையொருவர் முந்தியடித்துக் கொண்டு வந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்திய போது, ஒரு பாதுகாப்பு படை வீரர் ரசிகர்களை காலால் எட்டி உதைத்து விரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments