ஆம்னி கார் - சொகுசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 11 வயது சிறுமி உள்பட 6 பேர் உயிரிழப்பு..!

0 3225
ஆம்னி கார் - சொகுசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 11 வயது சிறுமி உள்பட 6 பேர் உயிரிழப்பு..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொகுசு பேருந்தின் மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

துக்க நிகழ்ச்சிக்காக 11 பேர் ஒரே காரில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  ஓட்டம்பாறை மேம்பாலம் பகுதியில் ஆம்னிகார் சென்றபோது  ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற பேருந்து மீது நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.

5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சிறுமி ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் ஓட்டுனரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments