வேலூரில் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்..!

0 2581
வேலூரில் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தையல் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த நாகேஸ்வரி என்பவர் கடந்த வெள்ளி அன்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தலைமை ஆசிரியை ஏற்படுத்திய மன உளைச்சலே இதற்கு காரணம் என அவரது மகன் போலீசில் புகார் அளித்திருந்தார்.

நேற்று பள்ளியில்  நாகேஸ்வரி படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திய சக ஆசிரியர்கள், மாணவர்கள் தற்கொலைக்கு காரணமாக இருந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments