இந்தியா வலிமை வாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

0 2980
இந்தியா வலிமை வாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியா உலகளவில் மிகப் பெரிய வலிமை வாய்ந்த நாடாக வளர்ந்து வருவதாகவும் ஆசிய அளவில் மிகப்பெரிய சக்தியாக விளங்குவதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பராகுவே நாட்டில் அந்நாட்டு அதிபர்  மாரிட்டோ அப்டோவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து பிரேகுவன் வெளியுறவு அமைச்சர் ஜூலியோ சீசர் அரியோலாவையும் சந்தித்து இரு தரப்பு நல்லுறவைக் குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

மிகவும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை என்று ஜெய்சங்ககர் தெரிவித்தார். கடந்த காலங்களில் இந்தியா வேகமாக வளர்ச்சி பெற்று வருவதாக தெரிவித்த அவர் உலகின் மிகவும் வலிமை மிக்க பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதாகத் தெரிவித்தார்.

பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்த அவர் உற்பத்தித் துறையிலும்இந்தியா தன்னிகரற்று விளங்குவதாக தெரிவித்தார்.

உலக அளவில் மிகப்பெரிய வலிமையுடைய நாடாகவும் ஆசிய அளவில் மிகப் பெரிய சக்தியாகவும் இந்தியா விளங்குவதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதனிடையே பராகுவே நாடு இந்தியாவுடன் நீண்ட கால நட்புறவை விரும்புவதாக அந்நாடு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments