டாஸ்மாக் கடை ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய இளைஞர் கைது.!

0 2716

சென்னை அடுத்த தாம்பரம் அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓட்டேரியில் உள்ள அந்த மதுக்கடைக்கு நள்ளிரவில் முகக்கவசம் அணிந்து வந்த அந்த இளைஞர் நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு சென்றார்.

உள்ளே உறங்கிகொண்டிருந்த ஊழியர்கள் யாரும் காயமடையாத நிலையில், இதுதொடர்பாக சொக்கலிங்கம் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த வாரம் சொக்கலிங்கம் மது போதையில் நாய்குட்டி ஒன்றை துன்புறுத்தியதை அன்ங்கிருந்த ஊழியர்கள் கண்டித்துள்ளனர்.

நேற்றிரவு மது அருந்திவிட்டு கிளம்பும்போது சேற்றில் சிக்கியிருந்த அவரது இருசக்கர வாகனத்தை எடுக்க உதவி கோரியபோது ஊழியர்கள் யாரும் முன்வராததால் ஆத்திரத்தில் நாட்டு வெடிகுண்டை வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments