தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

0 2032

வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்குத் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இன்று முதல் 3 நாட்களுக்குக் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments