வீட்டின் அருகே தாழ்வாக சென்ற மின்கம்பியை தெரியாமல் தொட்ட சிறுவன் படுகாயம்.!

0 1957

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாடியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், வீட்டின் அருகே செல்லும் மின்கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி கைகள் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த சொருகுவார் என்பவரின் 7 வயது மகன் அப்துல்லா, வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது கட்டிடத்திற்கு மிக அருகாமையில் தாழ்வாக சென்ற மின் கம்பியை எதிர்பாராதவிதமாக அப்துல்லா பிடித்ததாக கூறப்படுகிறது.

இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் கைகள் முழுவதும் கருகிய நிலையில் உடலில் மேலும் சில பகுதிகளில் காயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, வீடுகளுக்கு அருகே தாழ்வாக மின்கம்பிகள் சென்றால், நடுப்புறம் தடுப்புகள் அமைப்பது போன்ற போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments