ஓட்டுநருக்கு பதில் நடத்துநர் பேருந்தை இயக்கிய விவகாரம்.. இருவரும் பணியிடை நீக்கம்.!

0 5179

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அரசு பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் நடத்துனர் பேருந்தை ஓட்டிய விவகாரத்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருப்பதியிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்ட தடம் எண் 212 என்ற பேருந்தை ஓட்டுனர் தரணியேந்திரன் குடிபோதையில் இயக்கியதால், நடத்துனர் ஹோலிப்பேஸ் தடுமாற்றத்துடன் பேருந்தை இயக்கி வந்தார்.

இதனால் வந்தவாசியில் அந்த பேருந்தை நிறுத்துமாறு பயணிகள் கூச்சலிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பயணிகளை சமாதானப்படுத்தி மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments