மதுபான பார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு ஓட்டம் பிடித்த இளைஞர்.!

சென்னை அடுத்த தாம்பரம் அருகே முகக்கவசம் அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர் டாஸ்மாக் பார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
உள்ளே உறங்கிகொண்டிருந்த 8 ஊழியர்கள் எவ்வித காயங்களும் இன்றி தப்பித்தனர். நள்ளிரவில் வீசப்பட்ட அந்த நாட்டு வெடிகுண்டால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments