மீண்டும் உலக செஸ் சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

0 29920

உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.

ரேபிட் முறையில் நடைபெறும் கிரிப்டோ கோப்பை தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.

போட்டி டிரா ஆனதால் டை பிரேக்கரில் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றிபெற்றார். கார்ல்சன் தோற்றாலும் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடித்ததால் சாம்பியன் பட்டத்தை வென்றார். பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார். நடப்பாண்டில் 3-வது முறையாக கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments