நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல்.. 13 பேர் கைது..!

0 1866

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாட்னா மாவட்டத்தின் சோகி பகுதியில் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் நேற்று அணிவகுத்துச் சென்றபோது, அவற்றின் மீது திடீரென சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 4 வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்த நிலையில், அந்த வாகனங்களில் நிதிஷ்குமார் பயணிக்கவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு இதுவரை 13 பேரை பாட்னா போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments